» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ரெக்ட் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

ஞாயிறு 25, மார்ச் 2018 11:48:22 AM (IST)ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு பெற்ற 176 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காந்தி, மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜோதிவேல் ஆகியோர் வழங்கினார்கள். 

ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் வேலை வாய்ப்பு பெற்ற 176 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரிகலையரங்கில்நடைபெற்றது.கல்லூரித்தாளாளர் முத்தையா பிள்ளை தலைமை வகித்து தலைமையுரையாற்றினார்.கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்று பேசி, பணி நியமன ஆணை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார். காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காந்தி, மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜோதிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 176-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டி பேசினர்.

இறுதி ஆண்டு படித்து முடித்து வெளியேறும் அனைத்து மாணவ, மாணவியர்களும் வேலை வாய்ப்பு பெற்றிருப்பது பாராட்டக்கூடிய செயல் என்று சிறப்பு விருந்தினர்கள் மாணவ,மாணவிகளை பாராட்டினர். முடிவில் மெக்கானிக்கல் துறை தலைவர் மனோகர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory