» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

வெள்ளி 23, மார்ச் 2018 6:01:15 PM (IST)நாசரேத்-பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மெட்ரிக்குலேசன் மேல்நி லைப்பள்ளி 109-வது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு செவன்த் டே பள்ளிகளின் மண்டல கல்விஅதிகாரி  தேவராஜ் தலைமை தாங்கினார். பாஸ்டர் அருளானந்தம் டேனியல் ஆரம்ப ஜெபம் செய்தார். பாஸ்டர் குருசையா வேதபாடம் வாசித்தார்.பள்ளி முதல்வர் பூமி நாதன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். தலைமையாசிரியர் ஏ.எல்.துரை வரவேற்று பேசினார். 

ஐ.சி.எஸ்.இ.சி. தலைமை தேர்வு அதிகாரி பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் தலைமையா சிரியர் துரை நன்றி கூறினார். பாஸ்டர் குருசையா ஆசி வழங்கினார். இறுதியில் பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நடனங்கள், நாடகங்கள் நடைபெற்றது.


மக்கள் கருத்து

samsunApr 24, 2018 - 05:23:58 PM | Posted IP 162.1*****

welcome

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory