» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா

சனி 30, டிசம்பர் 2017 7:21:59 PM (IST)

நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

குழந்தைகள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் நிலத்திருவிழாக்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் நடத்தி வருகிறது. அதன் ஒரு நிகழ்ச்சியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப்பள்ளியும் இணைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு பகுதியில் 2017 டிசம்பர் 26 முதல் 28 வரை பாலை அறிவியல் திருவிழா நிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்செந்தூர் தாலுகா துணைத்தலைவர் கண்ண பிரான்தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜம்புராஜ் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தியாகராஜன் விழாவின் நோக்கம் குறித்த அறிமுகவுரை ஆற்றினார். விழாவினை ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் (பணிநிறைவு) பாபுசிவராஜ்கிருபாநிதி துவக்கிவைத்தார். விழாவினைப் வாழ்த்தி மாவட்டச்செயலாளர் முத்துசாமி, கணேசன் ஆகியோர் பேசினர். முதுகலை ஆசிரியர் திருநீலகண்டன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பின்னர் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த குழந்தைகளை இங்குள்ள பள்ளி குழந்தைகளின் வீடுகளுக்கு விருந்தாளிகளாக அழைத்து சென்றனர். இரண்டாம் நாள் தேரிக்காடு பகுதியில் குழந்தைகள் நடைபயனமாக சென்று பல்வேறு களஅனுபவங்களை பெற்றனர்.

களபயணத்திற்கு பின்பு குழந்தைகளுடன் பேராசிரியர் ராஜமார்த்தாண்டன், தேரிக்குடியிருப்பைச் சார்ந்த சௌந்திரபாண்டியன் நாடார், ராஜேந்திரன் தேரிக்காடுபற்றிய தங்களது அனுபவக்கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். டிசம்பர் 28ஆம் தேதி காலை பாலை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி குழந்தைகளின் அனுபவப்பகிர்வுடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் 40 உள்ளுர் குழந்தைகள், பிற மாவட்டத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட அறிவியல் இயக்கத்தினர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிச் செயலர் திரு. சேகர் ஆலோசனையின் படி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory