» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லுாரியில் உலக எயிட்ஸ் தினம் கொண்டாட்டம்

சனி 9, டிசம்பர் 2017 1:34:54 PM (IST)
தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், அன்னம்மாள் பழைய மாணவிகள் சங்கமும், கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும் இணைந்து இன்று எயிட்ஸ் பாதித்தோருக்கான நலத்திட்ட உதவி வழங்கி, உலக எயிட்ஸ் தினத்தை கொண்டாடினர். 

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட எச்ஐவி பாதித்தோர் நலச்சங்கத்தின் தலைவியான திருநங்கை ரங்கீலா ஜீவன் சிறப்புரை யாற்றி னார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவியும், தூத்து க்குடி எபநேசர் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வருமான சாந்தினி சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். இவ்விழாவில் எச்ஐவி பாதித்தோர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மூவருக்கு தையல் இயந்திரங்களை, கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் சார்பில் சாந்தினி வழங்கினார். 

தையல் இயந்திரம் பெற்றுக் கொண்ட பயனாளி ஏற்புரை வழங்கினார். கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் தலைவரும், கல்லூரியின் பொருளறிவியல் துறைப் இணைப் பேராசிரியருமான லதா நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக எயிட்ஸ்-கற்பித்தல் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் கணேசன்;, முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா,லதா, கல்லூரியின் செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் சுதாகுமாரி, மற்றும் சண்முக செல்வ சிவசங்கரி, வினோதினி சில்வியா ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory