» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டம்

திங்கள் 27, நவம்பர் 2017 6:40:40 PM (IST)
தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் வரலாற்று துறையின் சார்பாக இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று (27 ம் தேதி) அன்று கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரையாற்றினார். மக்கள் கண்காணிப்பகத்தின் தென் மண்டல  சட்ட அலுவலர் அதிசயகுமார் இந்திய அரசியலமைப்பில் பெண்களுக்கான சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அரசியலமைப்பு சட்ட முகவுரை வாசிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய வினாடி வினா நடத்தப்படடு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமையில் வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் ஜெயபார்வதி ஏற்பாடு செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory