» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நீர்தரப் பண்புகள் மேலாண்மை பயிற்சி

திங்கள் 20, நவம்பர் 2017 7:58:59 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் வளர்ப்பில் நீர்தரப் பண்புகள் மற்றும் அதன் மேலாண்மை என்ற பயிற்சி டிசம்பர் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை மூலமாக மீன் வளர்ப்பில் நீர்த்தரப் பண்புகள் மற்றும் அதன் மேலாண்மை பற்றிய மூன்று நாட்கள் பயிற்சியானது வருகிற 06.12.2017 முதல் 08.12.2017 வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் அலங்கார மீன்வளர்ப்பில் நீர்த்தரப்பண்புகளின் முக்கியத்துவம், உயிர் உணவு உற்பத்தி மற்றும் மிதவை உயிரிகளின் வளர்ப்பு பற்றிய பாடங்கள் செயல்முறை விளக்கங்களுடன் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் மீன் வளர்ப்போர், அலங்காரமீன் பண்ணையாளர்கள், இறால் பண்ணையாளர்கள், இறால் பண்ணையில் பணிபுரிவோர் மற்றும் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள் போன்றோர் பங்கு பெறலாம். மேலும், இப்பயிற்சியின் கட்டணத் தொகையாக ரூ.500-ஐ செலுத்தி பங்குகொள்ளலாம். பயிற்சியில் மூன்று நாட்களும் தவறாது கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியில் கலந்துகொண்டதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி – 628 008 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர், விலாசம், கைப்பேசி எண்கள் மற்றும் அனுபவம் போன்ற விபரங்களை தெரிவித்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியை பற்றிய விபரங்கள் அறிய 9994981493 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதலவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory