» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னை சத்யா அரசு இல்லத்தில் குழந்தைகள் தின விழா

வெள்ளி 17, நவம்பர் 2017 10:52:48 AM (IST)குழந்தைகள் தின விழா ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அன்னை சத்யா அரசு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்றது. 

இதில்  குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மீரா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

முன்னதாக அன்னை சத்யா அரசு ஆதரவற்ற குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் தனசீலன் சாம்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், நன்னடத்தை அலுவலர் ஜோசையா ராஜா, ஜேம்ஸ் அதிசய ராஜா, தாம்சன் தேவ சகாயம், அனிட்டா மங்கள செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ArasuNov 18, 2017 - 08:32:05 PM | Posted IP 157.5*****

Well done

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory