» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கொம்மடிக்கோட்டை பள்ளியில் குழந்தைகள் தின விழா

வியாழன் 16, நவம்பர் 2017 10:35:12 AM (IST)கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. 

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி செயலாளர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி துணை செயலாளர் காசியானந்தம் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமைஆசிரியையும் பள்ளி முதல்வருமானதேவி சுஜாதாராஜா வரவேற்று, ஜவர்ஹலால் நேரு குறித்தும், அவரின் சுதந்திரப் போராட்டங்களையும், தியாகங்களையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  

இதனையடுத்து மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுபோட்டி, மற்றும் நடனபோட்டி போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி துணை முதல்வர் சிவரத்னா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆங்கில ஆசிரியை கிருஷ்ணலெட்சுமி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory