» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழலையர் பள்ளிகளுக்கான கலை போட்டி பரிசளிப்பு விழா

சனி 11, நவம்பர் 2017 5:59:44 PM (IST)தூத்துக்குடியில் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கான கலை இலக்கியத்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட மழலையர் துவக்கப்பள்ளிகள் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மழலையர் துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், ஸ்பான்ஞ் பெயிண்டிங், கட்டுரை எழுதுதல், தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் போட்டி போன்ற கலை இலக்கியத்திறன் போட்டிகள் நடைபெற்றன. 

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடியில் நடந்நது. விழாவிற்கு பாளையங்கோட்டை மாக்தலின் மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மழலையர் துவக்கப்பள்ளிகள் சங்கத் தலைவர் வல்லநாடு பாரதி சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். சங்கச்செயலாளர் ஜோசப் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரிப் பேராசிரியர் சுயம்புலிங்கம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, டாக்டர் ராஜசேகர், வழக்கறிஞர் ரத்னசேகர், சென்னை தொழிலதிபர் ஜான்நெல்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
    
அதிகமான அளவில் போட்டியாளர்களைக் கலந்துகொள்ள வைத்தமைக்காக சாயர்புரம் ஜாய் ஷரான் பள்ளி முதல் பரிசும், தூத்துக்குடி ஜான்சன்பள்ளி இரண்டாவது பரிசும், முத்தையாபுரம் கோல்டன் பள்ளி மூன்றாவது பரிசும், அழ்வார் திருநகரி மழவராய நத்தம் கிரேஸ் சாமுவேல் பள்ளி நான்காவது பரிசும் கேடயங்களாகப் பெற்றன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் முதலாவது, இரண்டாவது பரிசும் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் துவக்கப்பள்ளி தாளாளர், மலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் திரளாகக் கலந்து கொண்டனர். சங்கப் பொருளாளர் ஜாய் பெல் பிராங்க் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை தூத்துக்குடி ஜான்சன் பள்ளி முதல்வர் ஜீவானா கோல்டி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை துணைத் தலைவர் கோல்டன் சரவணன் துணைச் செயலாளர் ஜேசன் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory