» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

வியாழன் 9, நவம்பர் 2017 2:33:53 PM (IST)

நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப் பள்ளியில் வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாசரேத் ஆய்வாளர் ரேனியஸ் ஜெசுபாதம் தலைமை தாங்கி, பள்ளி கொடியினை ஏற்றி, மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பெற்றோர்கள் வாகனத்தில் செல்லும் போது அதிக வேகத்துடன் செல்லக்கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கி னார். இதை பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் அன்பாக சொன்னால் அவர்கள் மனதில் பதிந்து விடும். அவர்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள். இதை  தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.,மகேந்திரன் அறிவுறித்தியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்து அதிகமாக உள்ளது. அதை நாம் மாற்றி காட்ட வேண்டும். ஆசிரியர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். தங்கசெயின் அணிந்து செல்லும் போது ஜாக்கிரதையாக அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்திற்கான உறுதிமொழி பிரசாரம் வழங்கி பெற்றோரிடம் கையொப்பம் பெற்று வரவும் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் ரகுபாலாஜி, தலைமை காவலர் ஜெபமணி கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பள்ளி தலைவர் சத்தியவதி மனோகரன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி நிர்வாகி பியுலா சாலமோன், முதல்வர் அனி ஜெரால்டு, உதவி முதல்வர் மகிலா மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory