» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மீன்தீவனம் தயாரித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி : 17 ல் நடக்கிறது

புதன் 8, நவம்பர் 2017 8:49:22 PM (IST)

தமிழ் நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் உணவியல் மற்றும் உணவு தொழில் நுட்பத்துறையில் மீன் தீவனம் தயாரித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி வரும் 17.11.2017 அன்று வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், மீன் தீவனம் தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த மூலப்பொருட்களை நன்றாக அரைத்தல், மீன் தீவனம் பிழிந்தெடுக்க பயன்படும் கருவிகள், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல், காய வைத்தல், மீன் தீவன தரக்கட்டுப்பாடு, உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும். 

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ. 300 செலுத்தி பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் நவம்பர்16 ம் தேதி மாலை 5 மணிக்குள் தொலை பேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

பேராசிரியர் மற்றும் தலைவர்
மீன் உணவியல் மற்றும் உணவு தொழில் நுட்பத்துறை
மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ் நாடு மீன்வளப்பல்கலைக்கழகம்
தூத்துக்குடி - 628 008.தொலை பேசி எண்: 0461 – 2340 554.
அலை பேசி எண்- 09442288850
மின் அஞ்சல்:[email protected]


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory