» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் ஆர்.சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செவ்வாய் 31, அக்டோபர் 2017 8:08:39 PM (IST)


துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர்  ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

கண்காட்சிக்கு ஆர்.சி பள்ளிகளின் தாளாளர் ஆராக்கியம் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி கண்காணிப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர்  அன்சலாம் ரோஜர் கண்காட்சியை துவங்கி வைத்தார். கண்காட்சியில் 5 வது  வகுப்பு உள்பட்ட பள்ளிகளுக்கும், 5 வது வகுப்புக்கு மேற்பட்ட் பள்ளிகளுக்கும்  இடையே தனித்தனியாக போட்டி நடந்தது. போட்டி நடுவராக கிங்ஸ்டன் டேவிட், பிரணிலா ஏஞ்சலின் ஆகியோர் கலந்துகொண்டனர். டுநிலைப்பள்ளிகளுக்கான போட்டியில் முதல் பரிசை செய்துங்கநல்லூர் ஆர். சி.நடுநிலைப்பள்ளியும், இரண்டாம் பரிசை இராமனுசம்புதூர் அரசு  பள்ளியும் பெற்றார்கள்.  ஒட்டுமொத்த சேம்பியனை செய்துங்கநல்லூர் ஆர். சி.நடுநிலைப்பள்ளி பெற்றது.

துவக்கப்பள்ளிக்கான போட்டியில் முதல்பரிசை செய்துங்கநல்லூர் டி.என்.டி. றி.ஏ பள்ளி பெற்றது. இராண்டாம் பரிசை கருங்குளம்  ஆர்.சி. பள்ளியும். மூன்றாவது பரிசை அரசர்குளம் ஆர்.சி பள்ளியும் பெற்றது. ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தினை  கருங்குளம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி பெற்றது.பரிசளிப்பு விழாவிற்கு செய்துங்கநல்லூர் கே.வி.பி. வங்கி மேலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் மேரி முன்னிலை வகித்தார்.

பரிசுகளை கருங்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் அமுதா பாய்,கருங்குளம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மக«ந்திரபிரபு ஆகியோர் வழங்கினர். அனைவருக்கும்  கல்வி திட்ட மேற்பார்வையாளர் சரவணன்,  அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர் சுனிதா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிதலைமை ஆசிரியர் அமலா  தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory