» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம்

வெள்ளி 6, அக்டோபர் 2017 8:45:09 PM (IST)
சின்னமாடன்குடியிருப்பு கிராமத்தில்,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சிறப்பு முகாம் 10 நாள்கள் நடைபெற்றது.  

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்  சார்பில் சிறப்பு முகாம் நாசரேத் அருகிலுள்ள சின்னமாடன் குடியிருப்பு கிராமத்தில், 10 நாள்கள் நடைபெற்றது.முகாமில் கால்நடை மருத்துவர் டாக்டர் சுரேஷ் தலைமை யில் 60 ஆடுகள்,30 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பொதுமருத்துவ முகாம் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் நடந்தது.சுகாதாரஆய்வாளர்கள் பால்ஆபிரகாம், தியாகராஜன் டெங்கு விழிப்புணர்வு முகாம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.முகாமில் சிறுதொழில் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் குறித்து பயிற்சியாளர் பாக்கியவதி, அழகுகலை பயிற்சியை பயிற்சியாளர் சுஜி, சிறுதொழில் பயிற்சியை பயிற் சியாளர் பாக்கியவதி ஆகியோர் அளித்தனர். 

முகாமில் பள்ளி தலைமையாசிரியர் ஜாண்சன் பால் டேனியல், தாளாளர் சந்திரன், கோவில் தர்மகர்த்தா ரத்தினசாமி நாடார்,முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அருணகிரி நாடார், சாமுவேல் பிரதாப்,பள்ளி உதவி தலைமையாசிரியர் அதிசயம்,ஆசிரியர்கள் தனராஜ், ராஜாசிங், ஸ்டீபன் உள்படபலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்டஅலுவலர் ஜெய்சன்சாமுவேல் தலைமையில் உதவிதிட்டஅலுவலர்கள் தனபால், அலெக்ஸன் கிறிஸ்டோபர் செய்திருந்தனர்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory