» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா

வெள்ளி 6, அக்டோபர் 2017 8:24:17 PM (IST)

துாத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.

யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு கொண்டிருக்கும் ஆசிரியர் தினவிழா வ.உ.சிதம்பரம் கல்வியியல் கல்லூரியில், நேற்று மாலை 3 மணியளவில் கொண்டாடப்பட்டது. மாணவ ஆசிரியர்கள் முத்து விஜயலெட்சுமி மற்றும் அய்யங்கனி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சுதா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கனகராஜ் தலைமை தாங்கினார். 

பிரேமலதா, பேராசிரியர்.ஆன்டணி ஆரோக்கிய அனுஃபியா, அந்தோனி வினோலியா மற்றும் மாணவர்கள் ஜெபமாலை செல்வன், கௌசல்யா, சிவசங்கரி, கார்னீலியஸ் ரம்யா ஆகியோர் சிறப்புரை வழங்கினர். கல்லூரி நிர்வாகம் சார்பாகவும், முதல்வர் சார்பாகவும் அனைவருக்கும் பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவி சங்கரகோமதி நன்றியுரை கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory