» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் துறை தொழில்நுட்பக் கருத்தரங்கம்

சனி 23, செப்டம்பர் 2017 5:57:05 PM (IST)தூத்துக்குடி, வாகைக்குளம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் துறை தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியக் கட்டுமானச் சங்கத்தின் தூத்துக்குடி மையத் தலைவர் பொறியாளர்.சரவணன் மற்றும் இந்தியக் கட்டுமானச் சங்கத்தின் திருநெல்வேலி மையத்தின் துணைத் தலைவர் பொறியாளர் சொக்கநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அமைப்பியல் துறையில் மாணவர்கள் சிறப்பாக செயல்படவும், வெற்றி பெறவும் ஆலோசனைகள் வழங்கினர்.  

கல்லூரி முதல்வர் முனைவர் ஜெரால்டு ஜெபக்குமார், துணை முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் வாழ்த்துரை வழங்கினர். துறைத் தலைவர் மார்டின் வரவேற்புரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்று அமைப்பியல் துறையில் புதிய தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வழங்கினர். சிறந்த கருத்துக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory