» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பன்னம்பாறை பள்ளி தலைமையாசிரியர்க்கு பாராட்டுச் சான்றிதழ்

வெள்ளி 15, செப்டம்பர் 2017 8:54:23 PM (IST)

திருநெல்வேலி கிரீன்சிட்டி அரிமா சங்கமும், டீம் டிரஸ்ட் அமைப்பினர் சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிமைக்கேல்ராஜ் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்து  பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
 
திருநெல்வேலி கிரீன்சிட்டி அரிமா சங்கமும், டீம் டிரஸ்ட் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சமூக நல அக்கறையோடு சிறப்பாக பணியாற்றும் 101 ஆசிரியர்களை தேர்வு செய்து  கௌரவிக்கப்பட்டார்கள். இதில் பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி மிக்கேல்ராஜ்க்கு சிறந்த ஆசிரியர் என பாராட்டுச்சான்றிதழை நீதிபதி கருப்பையா, சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன், முதன்மைக்கல்வி அலுவலர் தவமணி, அரிமா ஆளுநர் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்று  வழங்கினர். 

பாராட்டுச் சான்றிதழ் பெற்ற பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி மிக்கேல்ராஜை, சாத்தான்குளம் உதவிதொடக்கக்கல்வி அலுவலர் பாக்கியலெட்சுமி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் அர்ஜுன், பன்னம்பாறை அஞ்சலக அதிகாரி சுடலைமுத்து, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோசஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி, ஆசிரிய பயிற்றுநர் அருணா, ஆசிரியைகள் ஜேஸ்மின், கிறிஸ்டி ஆகியோர் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory