» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லூரியில் தூய்மையே சேவை திட்ட உறுதிமொழி

வெள்ளி 15, செப்டம்பர் 2017 6:15:03 PM (IST)
அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி தூய்மையே சேவை திட்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், பாரத பிரதமரின் புதிய இயக்கமான தூய்மையே சேவை என்ற திட்டத்தின் ஆரம்பமாக இன்று கல்லூரியில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் பயிலும் மாணவிகளும், கல்லூரியில் பணியிடைப் பயிற்சி மேற்கொண்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை வேதியியல் ஆசிரியர்களும் தூய்மையே சேவை என்ற உறுதிமொழியினை ஏற்றனர். உதவிப்பேராசிரியர் சுதாகுமாரி உறுதிமொழி வாசித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா மற்றும் உதவிப்பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory