» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

உடன்குடி அரசுப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

வியாழன் 7, செப்டம்பர் 2017 2:04:54 PM (IST)

சென்னை ரோட்டரி கிளப் மற்றும் மாவட்ட எழுத்தறிவு குழு சார்பில் மாநில அளவில் உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரை சிறந்த நல்லாசிரியர் ஆக தேர்வு செய்துள்ளது.

அந்த ஆமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறந்த நல்லாசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டு தோறும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.உடன்குடி புதுத் தெருவில் இயங்கி வந்த சைவப் பிரகாச வித்தியாசாலை ஏனும் பள்ளியின் கட்டிடங்கள் இடிந்த நிலையி லும்,பராமரிப்பில்லாத நிலையிலும் காணப்பட்டது.இப்பள்ளிக்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்ற பிரின்ஸ் பள்ளியை ஆரசு நடுநிலைப்பள்ளியாக தரம் ஊயர்த்தி பள்ளிக்கு புதிய கட்டிடங்கள்,ஆங்கில வழிக் கல்வி ஆகியவற்றைக் கொண்டு வந்து பள்ளியின் தரத்தை உயர்த் தினார்.

அதை ஆய்வு செய்த சென்னை  ரோட்டரி  கிளப் ஆமைப்பினர் தலைமையாசிரியர் பிரின்சிற்கு சென்னையில் நல்லாசிரியர் விருந்து வழங்கி கவுரவித்தனர்.செப்.5 ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் புலவர் ராமலிங்கம் நல்லாசிரியர் விருதினை வழங்கினார்.விழாவில் சென்னை மாவட்ட ரோட்டரி கிளப் கவர்னர் சீனிவாசன் ,சென்னை எழுத்தறிவு குழு தலைவர் ராமமூர்த்தி,செயலர் சிவக்குமார்,ரவி சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory