» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் தென்னை தினம் கொண்டாட்டம்

திங்கள் 4, செப்டம்பர் 2017 1:40:22 PM (IST)
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.

வேரிலிருந்து இலை வரை முழுக்க முழுக்க பயன்தரக்கூடிய தென்னை மரத்தினை கவுரவிக்கும் வகையில் தென்னை தினத்தை கல்லூரியின் முதல்வர் இராமலிங்கம் ஆலோசனையின் பேரில் என்.எஸ்.எஸ. மாணவர்கள் கொண்டாடினார்கள்.இந்த நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு வரவேற்று பேசினார்.

இதன் ஒரு பகுதியாக தென்னை வளர்ப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் , அவற்றிற்கான நிவர்த்தி முறைகள் குறித்தும் தென்னையில் மகசூலை பாதிக்கும் குறும்பை உதிர்தல், இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தென்னை டானிக் வேர் மூலம் செலுத்தும் முறையினை என்.எஸ்.எஸ். மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.

இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் என்.எஸ்.எஸ். உதவி ஒருங்கிணைப்பாளர் சோபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory