» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

திறனாய்வுத் தேர்வுகளில் சாலைபுதூர் பள்ளி மாணவர்கள் சாதனை

வியாழன் 11, மே 2017 8:26:21 PM (IST)

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் ஊரக திறனாய்வுத் தேர்வுகளில் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் சாலைபுதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நடப்பு கல்வி ஆண்டு மூலம் பிளஸ்டூ படிக்கும் வரை மாதம்தோறும் ரூ500 வீதம் கல்வி உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதேபோல் கிராமபுற மாணவர்களின் திறனை வளர்க்கும்  வகையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊரக திறனாய்வுத் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் சுரேஷ்பிரவின், சங்கர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் பிளஸ்டூ படிக்கும் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் ஜெயராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory