» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வஉசி கல்வியியல் கல்லுாரியில் கற்பித்தல் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 6:18:51 PM (IST)கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கற்பித்தல் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று துாத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்வியியல் கல்லூரியில் தொடங்கியது.

கல்லூரி முதல்வர் தாமோதரன் வரவேற்றார். கல்லூரி செயலர் .ஏ.பி.சி.வீ. சண்முகம் தலைமையுரையாற்றினார். அவர் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளிடம் திறமைகள் ஒளிந்திருக்கும். அதைக் கண்டறிந்து வெளிக் கொணர்வது ஆசிரியர் ஒவ்வொருவரின் கடமை என்று எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளைக் குறித்த கட்டுரைகள் இடம் பெற்ற மலரை தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மைய அலுவலர் சரவணன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அதன் முதல் பிரதியை கேரள பல்கலைக்கழக கற்றல் குறைப்பாடு உடையோர்களுக்கு கற்பித்தல் மைய இயக்குநர் கீதா ஜேனட் வைடஸ் பெற்றுக் கொண்டார்.

சரவணன் பேசும் போது முன்பு மாற்றுத் திறனாளிகளின் வகைகள் ஏழாக இருந்தது. ஆனால் இப்போது 21 வகையாக பிரிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறன் பெற்ற குழந்தைகள், மாணவர்களுக்கு அரசாங்கம் பல உதவிகளைச் செய்கிறது. மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்றே தனித் துறை உள்ளது. மாற்றுத் திறனாளிகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு கிடைக்கும் அரசாங்க உதவிகளை எடுத்துக் கூறி வழிகாட்டுகள் என்று கூறினார். கல்லூரின் பொருளறிவியல் பேராசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory