» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. துவக்கப்பள்ளி ஆண்டுவிழா

புதன் 19, ஏப்ரல் 2017 8:25:43 PM (IST)பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. 

விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திருமணடல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜெசுதாசன் ஆரம்ப ஜெபம் செய்து தலைமை தாங்கினார். புதுக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அன்பு, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ருக்மணிதேவி, ஓட்டப்பிடாரம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெசுராஜன் செல்வக்குமார், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கீதா, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் முத்துக்கனி, ஆசிரியர் பயிற்றுநர் அனிதா ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று நினைவு பரிசுகளை வழங்கினார்.

வி.வி.டைட்டானியம் பொது மேலாளர் பொன்சேகர், ஜெயதேவ், லயன் சிவக்குமார், லயன் காந்திமதி அம்மாள், ஊர் தலைவர் ஆறுமுகசாமி, அட்வகேட் ராஜேஷ்குமார், காளீஸ்வரன், வன்னியராஜ், யோவான், ஜெயக்குமார், அந்தோனிபிச்சை, சபை ஊழியர் ஏசுவடியான், தமிழாசிரியர் தேவராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.லயன் சிவக்குமார் அனைத்து மாணவ மாணவியருக்கும் இலவச சீருடை வழங்கினார். வேம்பார் தேவநேசம் இருதயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் ஜெபசேகர் ராஜன் பள்ளிக்கு டிவிடி பிளேயர் வழங்கினார். 

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தேவராஜ் பள்ளி உபயோகத்திற்கு கணினி வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்வி, விளையாட்டு, சிறுசேமிப்பில் முதன்மையானர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார். நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவு பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory