» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

துாத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா

வியாழன் 13, ஏப்ரல் 2017 6:34:12 PM (IST)

துாத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் இன்று தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.  

விழாவில் கல்லூரி முதல்வர்  தலைமை உரை ஆற்றினார். தமிழ்த்துறை மாணவ-ஆசிரியர் ஜாஸ்மின் வரவேற்றார்.  தமிழின் சிறப்பு குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, கோலப்போட்டி, நெருப்பில்லா சமையல் போட்டி, பாட்டுப்போட்டி, தனிநடனப்போட்டி மற்றும் குழு நடனப்போட்டி ஆகியப் போட்டிகள் நடைபெற்றன.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ் மொழியின் சிறப்பினை கவிதையின் மூலமாக பேராசிரியை  பிரேமலதா  எடுத்துரைத்தார். 

தமிழ்த்துறை மாணவ-ஆசிரியர் சுப்புலெட்சுமி தமிழின் பெருமை குறித்து உரையாற்றினார். தொழில்நுட்ப உதவிகளை வரலாற்றுத்துறை பேராசிரியர் இராஜதுரை , பொருளறிவியல் துறை மாணவர் சுரேஷ் ஆகியோர்  செய்தனர். தமிழ்த்துறை மாணவ-ஆசிரியர் எலிசெபத் சுகந்தி நன்றி கூற விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் தாமோதரன், விஜி, கிரிஜா மற்றும் தமிழ்த்துறை மாணவ-ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory