» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தெற்கு கள்ளிகுளம் கல்லூரியில் கருத்தரங்கம், கண்காட்சி

சனி 25, மார்ச் 2017 11:22:45 AM (IST)வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளம் தெட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் தமிழ்துறை சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

கண்காட்சியை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு திறந்துவைத்தார். குத்து விளக்கை கல்லூரி தலைவர் சபாபதி நாடார், முதல்வர் பொன் முருகன், துறை தலைவர் நிர்மாலா ஆகியோர் ஏற்றி வைத்தனர். கண்காட்சியில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, அறுபடை வீடு, ஐ வகை நிலங்கள், கடை யெழு வள்ளல்கள் , அபூர்வ பழங்காலத்து பொருள்களை பார்வைக்கு வைத்து மாணவ மாணவிகள் விளக்கம் அளித்தனர். 

அதன்பின் நெல்லை மாவட்ட பாரம்பரியமும், பண்பாடும் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் நிர்மலா வரவேற்றார். முதல்வர் பொன்முருகன் அறிமுவுரையாற்றினார். கல்லூரி நிர்வாக குழுவை சேர்ந்த தமிழ்செல்வன், ராஜ்குமார் ,பேராசிரியர் தமிழ்செல்வி ஆகியோர் பேசினர்.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கருத்துரை வழங்கினார். காலை மாலை இரண்டு அமர்வு நடந்தது. பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர் அபிஷ் விக்னேஷ் இயக்கிய குறும் படங்கள் மாணவர்களிடையே காண்பிக்கப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளர் கிரிஷா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory