» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் நாட்டுப் நலப்பணி திட்ட முகாம்

வெள்ளி 24, மார்ச் 2017 7:25:26 PM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டுப் நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகில் உள்ள வடக்கு காலாங்கரை கிராமத்தில் இன்று ( 24 ம்தேதி) முதல் மார்ச் 30 வரை நடைபெறுகிறது. 

இச்சிறப்பு முகாமின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் நடைபெற உள்ளன. இந்த முகாமின் வாயிலாக மீன்களை மதிப்பூட்டுதல் பயிற்சி, பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், ஆரோக்கியம் மற்றும் சுத்தம் பேணுதல், மலேரியா, டெங்கு காசநோய் விழிப்புணர்வு, கால்நடை மருத்துவ முகாம், கிராம துப்புரவு மற்றும் முழுச்சுகாதாரம், திறனாய்வுப் போட்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தல் போன்றவை நடைபெற உள்ளன.இந்த சிறப்பு முகாமின் தொடக்க விழா இன்று காலாங்கரை கிராமத்தில் ஊர் தலைவர் பொன்ராஜ், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை வாழ்த்துரை வழங்கினர். 

இம்முகாமில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் சுகுமார்  தலைமைதாங்கி பேசும் போது இக்கல்லூரி மாணவர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக கிராம மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். இங்கு நடைபெறும் ஒரு வார கால முகாமின் வாயிலாக இக்கிராம மக்களின் பங்களிப்பையும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.  

உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வரவேற்புரை வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர் செயலர் ஹரிகரன், நன்றியுரை வழங்கினார். இச்சிறப்பு முகாமில் நாட்டு நலப்பணி திட்டமாணவர்கள், தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory