» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் கல்லூரிகளில் மகளிர் தின விழா

வெள்ளி 10, மார்ச் 2017 8:38:58 PM (IST)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. 

விழாவிற்கு கல்லூரி தாளாளர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயராணி பிரேம்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.அதை தொடர்ந்து பேரணி நடந்தது. முன்னாள் எம்.பி ஏ.டி.கே ஜெயசீலன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி திருமறையூரில் இருந்து புறப்பட்டு நாசரேத் பஸ்நிலையம் வரை சென்றது. இதில் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமாரி மற்றும் கல்லூரி ஆசிரியைகள் , மாணவிகள் கலந்து கொண்டனர். 

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப்பணிக்குழுவும் புனித லூக்கா சமுதாய கல்லூரியும் இணைந்து மகளிர் தின விழாவை நடத்தின. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆஷா கவுசல்யா சாந்தினி தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகன், ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்க தலைவர் ஆறுமுகபெருமாள், செயலாளர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பேசினர்.

இதில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி தாளாளர் ஜேஸ்மின் ராபர்ட்சன், தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் லீதியாள் கிரேஸ் மணி, வக்கீல்கள் பெருமாள் பிரபு, கணேசன், சங்கரலிங்கம், முத்து ராமலிங்கம், கண்ணன், ஜெயபிரகாஷ், அமிர்தவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory