» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பெண்கள் சமூகத்துக்கும் பணியாற்ற முன்வர வேண்டும் : தூத்துக்குடி ஏஎஸ்பி வலியுறுத்தல்

வியாழன் 9, மார்ச் 2017 1:18:56 PM (IST)உலக மகளிர் தினத்தையொட்டி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் குழு விவாதம் நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியும் தூத்துக்குடி வீராங்கனை அமைப்பும் இணைந்து உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் குழு விவாதத்தைக் கல்லூரி வளாகத்தில் இன்று (8 ம் தேதி) நடத்தியது.குழு விவாதத்தைத் தூத்துக்குடி ஏஎஸ்பி செல்வ நாகரத்தினம், துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார். 

மேலும் கல்லூரியில் பெண்களுக்கான சட்டங்கள், உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் முதலியவை உள்ளடக்கிய சுவரொட்டிகளைத் திறந்துவைத்தார். அவர் தமது உரையில் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், ஆளுமைத்திறத்துடன் இருக்கவேண்டும் எனவும் தமது கடமைகளைச் செய்வதோடு மட்டுமன்றி சமூகத்துக்கும் பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் கூறினார். 

கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை நிகழ்த்தினார். விவாதத்தில் தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி உளவியல் ஆலோசகர் கௌசல்யா, மகப்பேறு மருத்துவர் தயாநிதி மோகன்தாஸ், வழக்கறிஞர் நீலவேணி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாணவிகளின் பல்வேறு வினாக்களுக்கு குழு விவாதத்தில் அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் பதில் அளித்தனர். 

குழு விவாதத்தின் தலைவராக தூத்துக்குடி வீராங்கனை அமைப்பின் தலைவி பாத்திமா பாபு கலந்துகொண்டு பெண்களின் மீது நடத்தப்படும் வன் கொடுமைகளைப் பற்றியும் அவற்றில் இருந்து எவ்வாறு நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும் உரையாற்றினார்.

குழு விவாதத்தில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் என்.டி.பி.எல். ஆகியவற்றில் இருந்து உறுப்பினர்களும் மற்றும் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வழிகாட்டுதலின்படி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்நாகலெட்சுமி செய்திருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory