» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி : சேர்வைகாரன்மடம் பள்ளி மாணவர்கள் சாதனை

வெள்ளி 3, மார்ச் 2017 6:30:54 PM (IST)

மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் தேவா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் அதிக பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்கவைத்துள்ளனர்.

ஹிட்டோ ரியோ ஆல் இந்தியா கராத்தே பள்ளி நடத்திய மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டி 2017 தூத்துக்குடியில் நடந்தது. இதில் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். சேர்வைகாரன்மடம் தேவா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் 59 போட்டிகளில் கலந்து கொண்டு 25 தங்கப்பதக்கமும், 14 வெள்ளி பதக்கமும், 17 வெள்ளி பதக்கமும் வென்று ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்க வைத்தனர். 

வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மற்றும் கராத்தே ஆசிரியர் சுரரேஷ்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ஜெயராஜன், முதல்வர் ஜீவா ராஜன், நிர்வாகி பிரதீப்குமார், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory