» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

துாத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வளத் திருவிழா

வியாழன் 2, மார்ச் 2017 7:42:31 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான மீன்வளத் திருவிழா கல்லூரி மாணவர் சங்கத்தால் நடத்தப்பட்டது. 

இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10 கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் தனிநபர் பாடல், ஓவியப்போட்டி, காய்கறி ,பழங்களில் செதுக்குதல், கோலப்போட்டி, வார்த்தை விளையாட்டு, மொழிபெயர்ப்பு போட்டி, விளம்பர யுக்தியை கையாளுதல், தனிநபர் நடனம், குழு நடனம் மற்றும் தனித்திறமை வெளிப்படுத்துதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் முதல் பரிசு தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி கல்லூரி சுழற்கோப்பையை வென்று ரொக்கப் பரிசாக ரூ.5000ம் வென்றனர். திருநெல்வேலி எம்.டி.டி. இந்து கல்லூரி இரண்டாவது பரிசிற்கான கேடயத்தையும் மற்றும் ரொக்கத் பரிசாக ரூ.3000ஐ வென்றனர்.

மீன்வளக்கல்லூரி முதல்வர் சுகுமார் நிறைவு விழாவில் தலைமையுரை ஆற்றினார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில் சமுதாயப் பிரச்சனைகளில் மாணவர்களின் பங்களிப்பையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறி மாணவர்கள் இவ்விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளனர் என்று பராட்டினார். மாணவர் மன்ற இலக்கிய துணைத்தலைவர் சீனிவாசன்,வரவேற்புரை ஆற்றினார். மாணவர் மன்ற இலக்கிய செயலாளர் அமீன் விழாவினை ஒருங்கிணைத்து, நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory