» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லுாரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கு

செவ்வாய் 28, பிப்ரவரி 2017 7:15:25 PM (IST)
அன்னம்மாள் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் கழகம் சார்பில் இன்று தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பூமியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர். ஜாய்சிலின் சர்மிளா  வரவேற்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் பூமியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கேரளம் பல்கலைக்கழக பேராசிரியர் லால் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் பூமியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற ஆபத்துகள் மற்றும் அதனை எதிர்கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் உரையாற்றினார்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் சண்முக செல்வ சிவ சங்கரி நன்றியுரையாற்றினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமையில் உதவிப்பேராசிரியைகள் தங்கசெல்வம்,சண்முக செல்வ சிவ சங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory