» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தேசிய அளவிலான தொழில் நுட்ப போட்டிகள் : மர்காஷிஸ் கல்லுாரி மாணவர்கள் சாதனை

திங்கள் 13, பிப்ரவரி 2017 2:02:53 PM (IST)
திருநெல்வேலியில் நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்ப போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்பம் மற்றும் கலாச்சாரம் தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி கணிப்பொறித் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பிரேம் ஜாஷ்வா மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கணினி கழிவு உபகரணங்களை பயன்படுத்தி தூசி உறிஞ்சும் இயந்திரத்தை தயாரித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிதியாளர் ஆசைதம்பிதாசன் வரவேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். கல்லூரி முன்னாள் ஆங்கில பேராசிரியர் கிப்ட் ஜெயக்குமார் பதக்கங்களை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் ரவீந்திரன் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை கணினித்துறைத் தலைவர் ஜெயபர்வின் மற்றும் பேரா.லெனின் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory