» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மர்காஷிஸ் பள்ளி பழைய மாணவர் சங்க ஆண்டு விழா

சனி 31, டிசம்பர் 2016 2:42:55 PM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்க 82வது ஆண்டு விழா நடந்தது. 

சங்கத் தலைவர் ஏ.டி.கே ஜெயசீலன் தலைமை வகித்தார். நாலுமாவடி சேகரகுரு மர்காஷிஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். இணைச் செயலர் ஆம்ஸ்ட்ராங் வரவேற்றார்.செயலாளர் ஜட்சன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். இணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஸ்ரீவைகுண்டம் எல்.ஐ.சி அதிகாரி சுந்தரலிங்கம், தொழிலதிபர் தனஷ்கரன், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெபராஜ் உள்பட பலர் பேசினர். 

கால்பந்து போட்டி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மீண்டும் 41வது முறையாக தலைவராக ஏ.டி.கே ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். உபதலைவர் மாமல்லன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory