» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

வெள்ளி 23, டிசம்பர் 2016 7:53:41 PM (IST)
உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவை கிறிஸ்தியாநகரம் சேகரகுரு கே.செல்வன் மகாராஜா ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.விழாவிற்கு பள்ளி நலக்குழுத்தலைவர் ஞானராஜ் கோயில்பிள்ளை தலைமை வகித்தார். திருமண்டில செயற்குழுஉறுப்பினர் எட்வர்ட்,இக்பால், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளித் தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் அனைவரையும் வரவேற்றார்.உதவி சேகரகுரு ஜான்சாமுவேல் வேதபாடம் வாசித்தார். பிரதம பேராயரின் ஆணையாளர் ஜெசுசகாயம் கிறிஸ்துமஸ் நற்செய்தியை வழங்கினார்.

மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை டிஎம்பி வங்கியின் முதன்மை மேலாளர் இசக்கியப்பன் வழங்கினார்.சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில லே-செயலர் எஸ்.டி.கே.ராஜன் பங்கேற்று பேசினார். பள்ளித்தாளாளர் அருள்ராஜா அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நினைவுப் பரிசுகளை வழங்கி நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்தார். தொழிலதிபர் சந்திரசேகரன் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் இனிப்புகளை வழங்கினார்.

விழாவில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில செயலர் ஜெபச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன்,பொருளாளர் நடராஜன், துணைத்தலைவர் துரைராஜ் ஜோசப்,தொழிலதிபர் ரவிராஜா, மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் பள்ளி தலைமையாசிரியர் ரூபன் புஷ்பராஜ், பேராசிரியர் ஹரிபிரகாஷ் உட்பட திரளான ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் மைக்கேல் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory