» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் மகளிர் கல்லுாரியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்

வியாழன் 22, டிசம்பர் 2016 6:38:47 PM (IST)




தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், கணித கழகம் சார்பில் இன்று தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். இக் கொண்டாட்டத்தில் கவிதை, மற்றும் கணித உலகிற்கு இராமானுஜத்தின் பங்களிப்பு பற்றிய உரை, கணித விளையாட்டுக்கள், புதிர் போட்டிகள், வினாடி வினா ஆகிய போட்டிகள் மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. 
 
இதில் முதல் இடத்தை ஹில்பர்ட் குழுவினரும், இரண்டாம் இடத்தை பர்னார்டு ரீமான் குழுவினரும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவியருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. மாணவி பூர்ணிமா சங்கரி நன்றியுரையற்றினார். கல்லூரி முதல்வர்ஜாய்சிலின் சர்மிளா தலைமையில், கணித உதவிப்பேராசிரியை சண்முக செல்வசிவசங்கரி மற்றும் கணித கழக மாணவியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory