» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லுாரி சார்பில் ஷேக்ஸ்பியர் 400 வது நினைவு ஆண்டு நிகழ்ச்சி

சனி 17, டிசம்பர் 2016 7:33:02 PM (IST)
துாத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர்கள் கழகம், தூத்துக்குடி அலகு சார்பில் இன்று ஷேக்ஸ்பியரின் 400 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான இலக்கிய விழா தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு போட்டிகளான வினாடி வினா, கட்டுரை எழுதுதல், ஷேக்ஸ்பியர் நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து 9 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கல்லூரி ஆலோசகர் செல்வராஜ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை துாத்துக்குடி வஉசி கல்லூரி வென்றது. இரண்டாம் இடத்தை செயின்ட் மேரீஸ் கல்லூரி வென்றது.கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory