» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் மகளிர் கல்லூரியில் உலக மனித உரிமைகள் தினம்

வெள்ளி 9, டிசம்பர் 2016 6:08:38 PM (IST)தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் மனித உரிமைகள் தொடர்பாகவும் மனித உரிமை மீறல் தொடர்பாகவும் உலக மனித உரிமைகள் தினம் 9 ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. 

ஐ.நா வின் வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் தினம் நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது.தமிழத்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட விழாவிற்கு வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் ஜெயபார்வதி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா சிறப்புரையாற்றினர். 

கல்வியியல் துறை உதவிப்பேராசிரியர் சூர்யகலா மனித உரிமைகள் என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறை நடத்தினார். மாணவர்களின் கலந்துரையாடலும் அவர்களின் பின்னுட்டமும் பயிற்சிப்பட்டறையில் இடம்பெற்றது. விழா ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமையில் வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் ஜெயபார்வதி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory