» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள்

சனி 26, நவம்பர் 2016 8:58:41 PM (IST)தூத்துக்குடி பாளை ரோட்டில் இராஜாஜி பூங்கா எதிரில் அமைந்துள்ள வெற்றி அறக்கட்டளையில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் நடத்தப்படும் தையல் பயிற்சியினை பெண்களுக்காக இலவசமாக நடத்தி வருகிறது. இதற்கான முதல் பயிற்சி வகுப்பு 26.2.16 அன்று தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சியில் தையல் கலை அடிப்படை நிலையில் இருந்து கற்று தரப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது கணிணி, யோகா,முதலுதவி, தீயணைப்பு, தன்னம்பிக்கை போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மேலும் தையல் பயிற்சிக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் கூடிய வழிகாட்டும் புத்தகமும் வழங்கப்படுகிறது.பயிற்சியின் முடிவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பும், விருப்பப்பட்டால் சுயதொழில் செய்யவும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. மற்றும் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்யும் மத்திய அரசின் சான்றிதழும் வழங்க ப்படுகிறது.

இதில் பங்குபெற விரும்பும் பெண்கள் 18 - 38 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் கொண்டு வந்து முன் பதிவு செய்து கொள்ளலாம். வெற்றி அறக்கட்டளை அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்விமையமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தகவல்களை வெற்றி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திரு.பா.கதிரேச பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் தகவல் அறிய  0461-2337227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory