» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் பயிற்சிப்பட்டறை

சனி 26, நவம்பர் 2016 5:43:24 PM (IST)அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் கழகம் சார்பாக நெருப்பில்லா சமையல் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் நாக லெட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் ஷர்மிளா வாழ்த்துரை வழங்கினார். இதில் சத்தான உணவு தயாரிப்பாளர் லோகநாதன் , , யோகா ஆசிரியர் தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சத்தான உணவின் முக்கியத்துவத்தினையும், பீட்ருட் ஊறுகாய், காய்கறி பசுங்கலவை, இனிப்பு அவல், கார அவல் போன்றவை தயாரிக்கும் முறைகளையும் பயிற்றுவித்தனர். 

இப்பயிற்சிப்பட்டறைக்கு கல்லூரிக்கு அருகிலுள்ள பெண்கள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதைத்தொடந்து இன்று நெருப்பில்லா சமையல் முறையில் சத்தான உணவு தயாரிக்கும் போட்டி மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவி பூர்ணிமா சங்கரி முதல் பரிசையும் முத்துலெட்சுமி,இரண்டாம் பரிசையும் பெற்றனர். 

வெற்றிப் பெற்றவர்களுக்கு தேவி, பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இப்பயிற்சிப்பட்டறை மற்றும் போட்டிகளை கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் ஷர்மிளா தலைமையில், சுற்றுச்சூழல் கழகம் ஒருங்கிணைப்பாளர் தங்கசெல்வம் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory