» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

உடன்குடியில் அறிவியல் கண்காட்சி

சனி 26, நவம்பர் 2016 5:30:54 PM (IST)

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டத்தின் கீழ் உடன்குடி ஒன்றியத்தில் புதுமனை குறுவளமையத்தில் தேசிய வளர்ச்சியில் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு என்ற தலைப்பின் கீழ் அறிவியல் கண்காட்சி நடந்தது.
 
காண்காட்சியை கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் முதுகலை ஆசிரியர் மைக்கேல் தொடங்கி வைத்தார். உடன்குடி தொடக்க கல்வி அலுவலர் நம்பிதுரை முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியர் ரெத்தினராஜ் வரவேற்றார். 

கண்காட்சியில் எட்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல்பரிசு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியும், இரண்டாவது பரிசை புதுமனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், மூன்றாவது பரிசை மணப்பாடு புனித ஜோசப் தொடக்கப்பள்ளியும் பெற்றன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை புதுமனைப்பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, அமிர்தசலேத் அனுஜா, சுமத்திரா, மாலா ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் இரட்டைமுத்து நன்றி கூறினா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory