» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாத்தான்குளம் பகுதி பள்ளிகளில் வினாடி வினா, அறிவியல் போட்டிகள்

வியாழன் 24, நவம்பர் 2016 7:41:24 PM (IST)விஜயராமபுரம் பள்ளியில் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலை பள்ளியில் கோவர்த்தன் அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா மற்றும் திருக்குறள், ஸ்ரீஅனுமன்சாலிசா, சிவபுராணம், ஸ்ரீமத் பகவத் கீதை , பக்திபாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. 

விழாவுக்கு ஒய்வுபெற்ற பள்ளி அலுவலர் சேகர் தலைமை வகித்து போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அறக்கட்டளையைச் சேர்ந்த வெங்கடேசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்  ஜெகதீசபாண்டி வரவேற்றார். உதவி ஆசிரியை ராஜேஸ்வரி பேசினார். இதில் அறக்கட்டளையைச் சேர்ந்த இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார்.மாவட்ட அளவிலான ரோபோ போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

சென்னை ஐவிஸ் அன்ட்ராய்டு ரோபோ நிறுவனத்தால் திருநெல்வேலி ரோஸ்மேரி பப்ளிக் பள்ளியில் வைத்து ரோபோ போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள்  பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் மோவாக்ஸ் (6ம் வகுப்பு), ஜெஸ்வின் சாமுவேல் (5ம் வகுப்பு) ஆகிய இருவரும் ரோபோ வைத்து கால்பந்தாடும் போட்டியில் முதற்பரிசு பெற்ற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டன.
 
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்ந்த  மாணவர்களையும்,அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள் சுவீனா, ராஜராஜேஸ்வரி, ஆனந்தி, ஜெபவசந்தி ஆகியோரை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் நோபுள்ராஜ், தலைமையாசிரியர் பங்கராஸ், பள்ளி நிர்வாக அதிகாரி சாந்தி, ஆசிரியர்கள் அருள்ராஜ், லிங்கத்துரை, சாந்தி, ஜெயராணி, உடற்கல்வி ஆசிரியர் பிரிட்டோ ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory