» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

துாத்துக்குடி அன்னம்மாள் கல்லுாரி சார்பில் திருமண விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஞாயிறு 13, நவம்பர் 2016 6:27:10 PM (IST)
துாத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் திருமண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகில் உள்ள காலாங்கரை கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது. இதன் ஒரு அங்கமாக இன்று (13 ம் தேதி) அன்று குழந்தைத் திருமண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தூத்துக்குடி குழந்தை உதவி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தலைமையில் குழுவாக தப்பாட்டம், ஒயிலாட்டம் மூலம் குழந்தை திருமண தடை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவியர், பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை சுற்றுச்சூழல் செயற்குழுவின் சார்பாக விடியல் தொண்டு நிறுவனத் தலைவர் குமாரவேல் தலைமையில் பொம்மலாட்டம் மூலமாக தூத்துக்குடி மாவட்ட அனல்மின் நிலைய மின்சாரத் தயாரிப்பின் பாதிப்புகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க பொருளாளர் வன்னியராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னம்மாள மகளிர் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியையும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவ லருமான சுதாகுமாரி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory