» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

உடன்குடி சல்மா பள்ளியில் விளையாட்டு விழா

சனி 12, நவம்பர் 2016 11:26:03 AM (IST)
உடன்குடி சல்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது.

விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியை சார்லஸ் சுவீட்லி தலைமை வகித்து அனை வரையும் வரவேற்றார். பள்ளிச்செயலர்சாகுல்ஹமீது, மேலாளர் ஷபி அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரி்ன்பராஜ்,குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

சென்னை அக்னி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் முஸ்பிர்,இப்ராகிம் பாதுஷா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி சாம்பியன் பட்டம் மாணவன் சிவக்குமார் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன .விளையாட்டு ஆசிரியர் உதயகுமார்,ஒருங்கிணப்பாளர் ஜோதி ஆகியோர் நன்றி கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory