» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தென்இந்திய அளவிலான தடகளபோட்டி, ஆசீர்வாதபுரம் பள்ளி சாதனை

திங்கள் 7, நவம்பர் 2016 7:30:40 PM (IST)

தென்இந்திய அளவிலான தடகள போட்டியில் ஆசீர்வாதபுரம் மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் புனித லூக்கா சிறுவர் மேம்பாட்டு மைய மாணவி மிஸ்பா, தெலுங்கானாவில் கிரிம்நகரில் 18 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான தென்இந்திய அளவிலான தடகள ஹெப்டாத்லான் போட்டியில் கலந்து கொண்டார். 

இதில் மாணவி மிஸ்பா வென்று முதலிடம் பெற்று தங்கபதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி மிஸ்பாவை மைய திட்ட இயக்குநர் அப்பாத்துரை, திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ்கிருபாகரன், மற்றும் சிறுவர் மேம்பாட்டு மைய பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory