» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி புனித லசால் பள்ளி 100 சதவிகித தேர்ச்சி

செவ்வாய் 17, மே 2016 5:03:21 PM (IST)

நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி புனித லசால் பள்ளி 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. 

இப்பள்ளியில் 167 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி, அனைவருமே தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். குறிப்பிடத்தகுந்த விதமாக மாணவர் ஸ்டெபின்  பள்ளியில் 1126 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவர் சச்சின் மற்றும் மாணவர் சூரியபிரகாஷ் ஆகியோர் முறையே பள்ளியில் 1121 மற்றும் 1098 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றுள்ளனர். 

வணிகவியல்  மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களில் மாணவர்கள் சிவா, ளு.தினேஷ், சில்வெஸ்டர், முபாரக், நிர்மல், து.தினேஷ், சரவணண், மஞ்சுநாத், இரட்டைமலைசீனிவாசன், ஜோசப், மணிகண்டன்,     சூரிய பிரகாஷ், விக்னேஷ் ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண்கள்; பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் அருட்சகோதரர்.ராபர்ட், தலைமையாசிரியர் திரு.பெப்பின், மற்றும் ஏனைய ஆசிரியர்கள், அலுவலர்கள் பள்ளியின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

E.லிங்கராஜ்Mar 14, 2019 - 09:05:14 PM | Posted IP 172.6*****

Iam linga kurangani old student for 2012-2014 9th-10th class and muthuchippi hostal. my school 100 prensentege . Iam be happy thank you so much sir.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory