» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
விரைவில் குரூப் 4 பாடத்திட்டம் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி தகவல்
வெள்ளி 31, டிசம்பர் 2021 3:27:10 PM (IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் தேர்வாணைய இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இனையதளத்தில் இடம்பெற்றுள்ள பழைய பாடத்திட்டம் நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக புதியதாக பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெறும். பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் (ஒஎம்ஆர்) முறையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
சனி 28, ஜனவரி 2023 4:02:02 PM (IST)

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 3, 4 தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம் வெளியீடு!
வியாழன் 6, ஜனவரி 2022 10:52:45 AM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கம்
வெள்ளி 24, டிசம்பர் 2021 5:26:08 PM (IST)
