» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கான ஆயத்த பயிற்சி : ஆட்சியர் தகவல்
வெள்ளி 24, டிசம்பர் 2021 5:04:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க, ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் WWW.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Guidelines) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0461-2320458 மற்றும் 9384824352 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 3, 4 தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம் வெளியீடு!
வியாழன் 6, ஜனவரி 2022 10:52:45 AM (IST)

விரைவில் குரூப் 4 பாடத்திட்டம் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி தகவல்
வெள்ளி 31, டிசம்பர் 2021 3:27:10 PM (IST)
