» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

புதன் 9, மார்ச் 2022 3:44:15 PM (IST)

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு  (டெட்)    தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.500, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்,

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I ஜூன் 27 மற்றும் தாள் - II ஜூன் 28 ஆம் தேதி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory