» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?

செவ்வாய் 1, அக்டோபர் 2019 5:45:11 PM (IST)

படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கான உதவித் தொகையைப் பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை, வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன? 

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் டூ, டிப்ளமோ, இளங்கலை முடித்து, தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 40 வயதுக்குள்பட்டவராகவும் (ஆதி திராவிடர் 45 வயதுக்கு மிகாமல்) இருக்க வேண்டும். 

ஆண்டு வருமானம்: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் (மாதம் ரூ.6,000) இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை. கடந்த 25.07.2019 முதல் அரசாணை நிலை எண்.127ன்படி உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களைப் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். மாற்றுத்திறனாளிகளும் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தினை பெறலாம்.  மேலும் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்ற பயனாளிகள் சுய உறுதி மொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண்ஸ வங்கி புத்தக நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


மக்கள் கருத்து

அரோக்கியா திபர்கிஸ் ரோச்Oct 23, 2019 - 12:48:48 PM | Posted IP 162.1*****

10. + 2 சாத்தியம்

TUTYOct 15, 2019 - 12:12:15 PM | Posted IP 162.1*****

INTHA SCEME TOTALY WASTE ,FINANCE WASTE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory