» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 2, ஜனவரி 2017 5:11:52 PM (IST)

தமிழக அரசு துறைகளில் பல்வேறு  காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் பல்வேறு அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைப்பணிகள் துறைக்கு ஆட்தேர்வு செய்யும் எம்.ஆர்.பி. அமைப்பு தற்போது தெராபிடிக் அசிஸ்டன்ட் பணிக்கு 106 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதேபோல தமிழ்நாடு காகித கழகத்தில் 55 பணியிடங்களும், கைத்தறி துறையில் ஏற்பட்டுள்ள உதவி டைரக்டர் பணியிடங்களுக்கு 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...

106 துணை மருத்துவ பணிகள்

தமிழ்நாடு எம்.ஆர்.பி. அமைப்பு தெராபிடிக் அசிஸ்டன்ட் பணிக்கு ஆண் மற்றும் பெண் மருத்துவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆண்களுக்கு 57 பணியிடங்களும், பெண்களுக்கு 49 பணியிடங்களும் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-7-2016-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் 57 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு நேர்காணல் கிடையாது. டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 50 சதவீதமும், மேல்நிலைக் கல்விக்கு 30 சதவீதமும், எஸ்.எஸ்.சி. படிப்பிற்கு 20 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற முடியும்.

விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ.எஸ்.டி. பிரிவினர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், துறை ஊழியர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 9-1-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

காகித கழகத்தில் 55 பணிகள்

தமிழ்நாடு காகித கழகம் சுருக்கமாக டி.என்.பி.எல். என அழைக்கப்படுகிறது. கரூரில் செயல் படும் இந்த தமிழக அரசு நிறுவனத்தில் தற்போது அசிஸ்டன்ட் ஆபீசர், ஜூனியர் ஆபீசர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி பாய்லர் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், லேப் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிசார்ந்த என்.டி.சி., என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை www.tnpl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். அதன்படி விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 4-1-2017-ந் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

கைத்தறி - நெசவுத் துறையில் 

தமிழ்நாடு கைத்தறி மற்றும் நெசவுத் துறையில் உதவி இயக்குனர் பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெக்ஸ்டைல் பட்டப்படிப்பு, எம்.ஏ. பொருளாதாரம், எம்.காம். எம்.எஸ்சி. கணிதம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.175 கட்டணம் செலுத்தி, 12-1-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்க்கலாம்.


மக்கள் கருத்து

சி.பிரகாஷ்Jun 12, 2017 - 09:32:53 AM | Posted IP 168.2*****

பி.எ பொருளாதாரம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory