» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணிகள் : ஸ்டாப் செலக்சன் கமிஷன் தகவல்

திங்கள் 2, ஜனவரி 2017 5:06:25 PM (IST)

பத்தாம்  வகுப்பு படித்தவர்களை மத்திய அரசு பணிகளில் நியமிக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்று ஸ்டாப் செலக்சன் கமிஷன். (எஸ்.எஸ்.சி.) பல்வேறு தரப்பட்ட மத்திய அரசு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் நியமனம் செய்து வருகிறது. தற்போது 10-ம் வகுப்பு படித்தவர்களை பன்முக அலுவலர் (மல்டி டாஸ்கிங் ஸ்டாப்- நான் டெக்னிக்கல்) பணிக்கு நியமிக்கும் எழுத்துத் தேர்வை அறிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. மொத்தம் நிரப்பப்படும் பணியிடங்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-1-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கட்டணம் செலுத்த கடைசி நாள் 20-1-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssc.nic.in, www.sscon line.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்கவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory